பிரத்தியேக ஆடை வடிவமைத்து புதுச்சேரி மதுபானங்களை கடத்திய பெண் ஒருவரையும், காரின் மூலம் 40 மதுபான பாட்டில்களை கடத்திய இளைஞர் ஒருவரையும் விழுப்புரம் போலீசார் கைது செய்தனர்.

பிரத்தியேக ஆடை வடிவமைத்து புதுச்சேரி மதுபானங்களை கடத்திய பெண் ஒருவரையும், காரின் மூலம் 40 மதுபான பாட்டில்களை கடத்திய இளைஞர் ஒருவரையும் விழுப்புரம் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான விபரம் பின்வருமாறு.
கடந்த 8 ஆம் தேதி அன்று கிளியனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புதுச்சேரி மதுபான பாட்டில்களை பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட உடையில் சிறு சிறு பாக்கெட்டுகள் வைத்து கடத்திய வானூரை சேர்ந்த அமுதா (வயது 48) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரைத் தொடர்ந்து கண்காணித்து கைது செய்ய உதவிய கிளியனூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் சத்யராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
கோட்டகுப்பம், பட்டானூர் சோதனை சாவடி அருகே ஆய்வாளர்அறிவழகி மற்றும் காவலர்கள் ஜெயக்குமார், தங்கம் ஆகியோர் தலைமையில் வாகன தணிக்கை இருந்தபோது அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, சென்னை செனாய் நகரில் வசிக்கும் மூவேந்தன் என்பவரின் மகன் சந்திரசேகர் (26) சொகுசு காரில் 40 750 மில்லி லிட்டர் பாட்டில்கள் இருந்துள்ளது. இதையடுத்து, மது பாட்டில்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்த்தனர். மேலும் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் : INDIANEXPRESS
