Home இந்தியன் எக்ஸ்பிரஸ்அமைச்சர் குடும்பத்தின் போலி மது ஆலை: தமிழகத்தில் விற்பனை- புதுச்சேரி அதிமுக பகீர் குற்றச்சாட்டு

அமைச்சர் குடும்பத்தின் போலி மது ஆலை: தமிழகத்தில் விற்பனை- புதுச்சேரி அதிமுக பகீர் குற்றச்சாட்டு

by bait
0 comments

புதுச்சேரியில் தயாரிக்கப்படும் போலி மதுபானங்கள், தமிழக டாஸ்மாக் கடைகளில் திமுக ஆட்சியாளர்களின்துணையுடன் விற்பனை செய்யப்படுவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

புதுச்சேரியில் தயாரிக்கப்படும் போலி மதுபானங்கள், தமிழக டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் புதுச்சேரியில் போலியாக தயாரிக்கப்பட்டு தமிழக திமுக ஆட்சியாளர்கள் துணையோடு டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்படுகிறது.

banner

இவ்வாறு புதுச்சேரியில் தயாரிக்கப்படும் போலி மதுபானங்கள் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், சிதம்பரம், மரக்காணம், திண்டிவனம் ஆகிய பத்துக்கும் மேற்பட்ட தமிழக மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றது. இந்த மதுபானங்கள் புதுச்சேரியில் போலி மதுபானம் தயாரிக்கப்பட்டு தினசரி பல கனரக வாகனங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மதுபானங்கள் புதுச்சேரியில் இருந்து கடத்தப்படுகிறது. புதுச்சேரியை தங்களது மதுபான உற்பத்தி கேந்திரமாக பயன்படுத்திக் கொண்டு தங்கு தடை இல்லாமல் தமிழகத்துக்கு கடத்தப்படுகிறது.

தகவல் : INDIANEXPRESS

You may also like

Leave a Comment