Home Uncategorizedஈரோட்டில் அளவுக்கு அதிகமான மது அருந்தியவர் பலி

ஈரோட்டில் அளவுக்கு அதிகமான மது அருந்தியவர் பலி

by bait
0 comments

ஈரோடு வைரபாளையத்தைச் சேர்ந்த 35 வயதான கிருஷ்ணமூர்த்தி, மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது அருந்தி சாலையோரம் மயங்கி கிடந்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது தாய் சரோஜா அளித்த புகாரின் பேரில் கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகவல் : GETLOKALAPP

You may also like

Leave a Comment