ஈரோடு மாவட்டம் ஆசனூர் சோதனைச் சாவடியில், கர்நாடக மாநில மது பாட்டில்களைக் கடத்தி வந்த கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த சிவசுப்பிரமணி (35) என்பவரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 3 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோதமாக மதுபானம் கடத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது