Home Uncategorizedcheck-கஞ்சா போதையில் போலீசாரை தாக்க‌ முயன்ற 3 போதை ஆசாமிகள்!

check-கஞ்சா போதையில் போலீசாரை தாக்க‌ முயன்ற 3 போதை ஆசாமிகள்!

by bait
0 comments

கஞ்சா போதையில் போக்குவரத்து போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே உள்ளது திருக்கோவிலூர் போக்குவரத்து காவல் நிலையம்.

இந்த பகுதியில் இரவு 8 மணி அளவில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது மேல வீதியில் இருந்து பேருந்து நிலையம் நோக்கி ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்துள்ளனர். அவர்கள் மூவரையும் நிறுத்தி சோதனை செய்ய முற்பட்டுள்ளனர்.

அப்போது மூவரும் மது மற்றும் கஞ்சா போதியிலிருந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களின் வாகன பதிவெண்ணை வைத்து வழக்கு பதிவு செய்ய முற்பட்டுள்ளனர். அப்போது, போலீசாருக்கும் கஞ்சா போதையில் மற்றும் மது போதையில் இருந்த மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

banner

இதனையடுத்து, அங்கிருந்து தப்பித்து மூவரும் வாகனத்தை எடுத்துக் கொண்டு அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், அவர்களை துரத்திச் சென்ற போக்குவரத்து உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் யூனியன் ஆபீஸ் சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் பிடித்து வாகனத்தை பறிமுதல் செய்ய முயற்சி செய்துள்ளனர்.

அப்போது போக்குவரத்து போலீசாரை மூவரும் தாக்கியுள்ளனர். பின்னர் சக போலீசார் வருவதை கண்டு வினோத் என்பவன் அங்கிருந்து தப்பியுள்ளான்.

பின்னர் உதவி ஆய்வாளரை தாக்கிய விக்னேஷ் மற்றும் சிபிராஜை அழைத்து வந்து திருக்கோவிலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா போதையில் போக்குவரத்து போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தகவல் : RAJNEWS

You may also like

Leave a Comment