Home Uncategorizedமதுபோதையில் தகராறில் ஈடுபட்ட ராணுவ வீரர்- தர்ம அடி கொடுத்த இளைஞர்கள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட ராணுவ வீரர்- தர்ம அடி கொடுத்த இளைஞர்கள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

by bait
0 comments

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரில் சாலையில் சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்ட மதுபோதையில் இருந்த ராணுவ வீரரை இளைஞர்கள் இரும்பு கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த வீடியோ இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம்…

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரில் சாலையில் சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்ட மதுபோதையில் இருந்த ராணுவ வீரரை இளைஞர்கள் இரும்பு கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த வீடியோ இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் சந்திப்பில் அடுத்தடுத்து இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் குடித்துவிட்டு அங்கேயே மயங்கி கிடப்பதும், அவ்வழியாக செல்வோரை வம்பிழுப்பதும் தொடர் கதையாக உள்ளது.இதனால் பெண்கள்,முதியவர்கள் சொல்லென்னா துயரத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் திருவட்டாரை அடுத்த மாத்தூரை சேர்ந்த ரெதிஷ்குமார் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் விடுமுறையொட்டி ஊருக்கு வந்த ரெதிஷ் ஆற்றூரில் உள்ள மது கடைக்கு சென்று மரு அருந்திவிட்டு அவ்வழியாக சென்றவர்களிடம் தேவையில்லாமல் வீண்வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் ரெதிஷை கீழே தள்ளிவிட்டு மிதித்ததோடு மட்டுமின்றி அருகிலிருந்த இரும்பு கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.

banner

தகவல் அறிந்து சுமார் இரண்டு மணி நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு வந்த திருவட்டார் காவல்துறையினர் ரத்தகாயங்களுடன் கிடந்த ரெதிஷை மீட்டு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இது குறித்து ரெதிஷ் அளித்த புகாரின் பேரில் அவரை தாக்கிய இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.இந்நிலையில் ரெதிஷை கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தகவல் : NEWS7TAMIL

You may also like

Leave a Comment