Home Uncategorized1.5 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் கைது

1.5 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் கைது

by bait
0 comments

ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று இரவு ஆட்டோவில் கடத்திவரப்பட்ட 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், கைக்குழந்தையுடன் பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆட்டோவில் கஞ்சா கடத்தி வருவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து நேற்று இரவு மதுவிலக்கு மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் சர்ச் சந்திப்பு அருகே சிவகாசியில் இருந்து வந்த ஆட்டோவை போலீஸார் சோதனை செய்தனர். கைக்குழந்தை உட்பட 3 குழந்தைகளுடன் ஆட்டோவில் வந்த சிவகாசி நந்தவனம் தெருவை சேர்ந்த வைரமணி மனைவி ராஜலட்சுமி(25) என்பவரிடம் 1. 5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

அவரிடம் விசாரித்ததில் ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி தெருவை சேர்ந்த முனியாண்டி மனைவி ராக்கு(67) என்பவரிடம் கொடுப்பதற்காக கஞ்சாவை கொண்டு வந்ததாக தெரிவித்தார். ராஜலட்சுமியை கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அவருடன் இருந்த இரண்டு மாத கைக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதால் குழந்தையையும் அவருடன் சிறைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ராக்கு என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தகவல் : GETLOKALAPP

banner

You may also like

Leave a Comment