Home Uncategorizedசேலம்: சிறைக்குள் கஞ்சா, போதை மாத்திரை, செல்போன் வீச்சு

சேலம்: சிறைக்குள் கஞ்சா, போதை மாத்திரை, செல்போன் வீச்சு

by bait
0 comments

சேலம் மத்திய சிறையில் 1,200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை சிறையின் பின்பகுதியில் இருந்து டேப் சுற்றப்பட்ட 6 பந்துகள் வீசப்பட்டன. இதனை கவனித்த வார்டன்கள், 6 பந்துகளையும் எடுத்து பிரித்து பார்த்தபோது, 500 பீடி, 60 போதை மாத்திரைகள், 700 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள் ஆகியவை இருந்தன. இது குறித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், சிறையின் பின்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் ஆள்நடமாட்டம் குறித்து உருவம் ஏதேனும் பதிவாகி உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.

தகவல் : GETLOKALAPP

You may also like

Leave a Comment