Home Uncategorizedகொசூர் டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோத மது விற்பனை

கொசூர் டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோத மது விற்பனை

by bait
0 comments

கரூர் மாவட்டம், சிந்தாமணிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொசூர் பகுதியில் சட்டவிரோத விற்பனை நடப்பது குறித்து காவல் உதவி ஆய்வாளர் கண்ணதாசனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஜூலை 17ம் தேதி மாலை 5:30 மணி அளவில் கொசூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த கொசூர் சுக்காம்பட்டியைச் சேர்ந்த மருதமுத்து வயது 33 என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த 26 குவார்ட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் மருதமுத்து மீது வழக்கு பதிவு செய்த சிந்தாமணிபட்டி காவல்துறையினர் அவரை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

தகவல் : GETLOKALAPP

You may also like

Leave a Comment