ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த குன்னத்தூர் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக, ஈரோடு டவுன் மதுவிலக்கு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன் பேரில், அப்பகுதியில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் குன்னத்தூர் அரசு மதுபானக் கடை அருகே, சட்ட விரோதமாக மது விற்றுக்கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த நவநீதன் (35) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று, தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த நவீன்குமார் (26) இவர் விற்பனை செய்யும் நோக்கத்துடன், சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் செக் போஸ்ட் வழியாக, கர்நாடக மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்துள்ளார். அப்போது, செக் போஸ்ட்டில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த கோபி மதுவிலக்கு போலீசார், நவீன்குமாரை கைது செய்து, 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தகவல் : GETLOKALAPP