Home Uncategorizedஈரோடு: கர்நாடக மாநில மது கடத்தி வந்தவர் கைது

ஈரோடு: கர்நாடக மாநில மது கடத்தி வந்தவர் கைது

by bait
0 comments

கர்நாடக மாநில மது கடத்தி வந்தவர் கைது ஈரோடு மாவட்டம், ஆசனூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ஆசனூர் சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் கர்நாடக மாநிலத்தின் மது பாட்டில்கள் 2 கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் அவர் தர்மபுரி, அக்ரஹாரம் பகுதி சேர்ந்த சுபாஷ் (26) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் கடத்தி வந்த ரூ. 700 மதிப்பிலான கர்நாடக மாநிலத்தின் மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

தகவல் : GETLOKALAPP

You may also like

Leave a Comment