Home இந்தியன் எக்ஸ்பிரஸ்கோவை மாணவி கூட்டு வன்கொடுமை: பெண்கள் பாதுகாப்பை தி.மு.க. புதைத்துவிட்டது- அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்

கோவை மாணவி கூட்டு வன்கொடுமை: பெண்கள் பாதுகாப்பை தி.மு.க. புதைத்துவிட்டது- அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்

by bait
0 comments
கோவை மாணவி கூட்டு வன்கொடுமை - அரசியல் கண்டனம்

கோவை விமானநிலையத்திற்கு பின்புறமுள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த  தனியார் கல்லூரி மாணவியை  3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று  கூட்டுப் பாலியல் வன்கொடுமை  செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனை கட்டுக்கடங்காத அளவுக்கு பெருகியிருப்பது தான் இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம் என எதிர்க் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 

அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தன் X பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில்; 

பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்துவிட்ட ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

banner

அஇஅதிமுக ஆட்சியில் இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கியது. குறிப்பாக,  எனது தலைமையிலான ஆட்சியில், இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத்தகுந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடமும், பெரு நகரங்களில் சென்னை முதலிடமும், நகரங்களில் கோயம்புத்தூரும் தொடர்ந்து இடம் பெற்று வந்தன. அம்மா அரசின் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டது.

தகவல் : INDIANEXPRESS

You may also like

Leave a Comment