Home Uncategorizedகண்டக்டர் இல்லாமல் பஸ்சை எடுத்துக்கொண்டு டிரைவர் செய்த காரியம்! மதுரை சாலையில் சிக்க வைத்த பயணிகள்

கண்டக்டர் இல்லாமல் பஸ்சை எடுத்துக்கொண்டு டிரைவர் செய்த காரியம்! மதுரை சாலையில் சிக்க வைத்த பயணிகள்

by bait
0 comments

வகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அரசு பேருந்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து நிலையத்தையே சுற்றி சுற்றி ரவுண்டு அடித்த சம்பவம் பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. அது மட்டும் இன்றி கண்டக்டர் இல்லாமல் பேருந்தை எடுத்துக்கொண்டு மதுரை சாலையில் கொண்டு டிரைவர் நிறுத்தினார். இதனால் கோபம் அடைந்த பயணிகள் டிரைவரிடம் வாக்குவாதம் செய்த போதுதான் அவர் குடிபோதையில் இருந்தது கண்டறியப்பட்டது. பேருந்துகளில் தன்னை நம்பி 40 பயணிகள் பயணம் செய்கிறார்கள் என்ற பொறுப்புணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் ஒரு சில டிரைவர்கள் நடந்துகொள்ளும் விதம் பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. குடிபோதையில் வண்டியை ஓட்டுவது, செல்போனில் ரீல்ஸ் பார்த்துக்கொண்டே பஸ்சை ஓட்டுவது, சாப்பிட்டுக்கொண்டே ஓட்டுவது என அஜாக்கிரதையாகசிலபேருந்துஓட்டுநர்நடந்து கொள்ளும்சம்பவங்கள்அதிர்ச்சியைஅளிக்கிறது.
driver-takes-government-bus-without-conductor-passengers-scared-after-stopping-on-madurai-road

மீண்டும் மீண்டும் ரவுண்ட் அடித்த பஸ் இது தொடர்பான சம்பவங்களை அதிகாரிகள் கவனத்திற்கு சென்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனினும், ஆங்காங்கே இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து டிரைவர் ஒருவர் மது போதையில் செய்த காரியம் பயணிகளை பீதி அடைய வைத்துள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் இரவு 8.20 மணி அளவில் சிவகங்கை வழியாக மானாமதுரைக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு இந்த பேருந்து புறப்பட்டது. ஆனால், பேருந்து திருப்பத்தூர் பேருந்து நிலையத்தை சுற்றி சுற்றி ரவுண்டு வந்தது. மதுபோதையில் பஸ் டிரைவர் பின்னர் மீண்டும் பேருந்து நிலையம் உள்ளேயே வந்து நின்றது. இதனால் பேருந்தில் ஏதேனும் பழுது இருக்கலாம் என பயணிகள் நினைத்தனர். ஆனால், மீண்டும் அதேபோல பேருந்து நிலையத்தை பஸ் சுற்றி வந்தது. இதையடுத்து, பயணிகள் அதிர்ச்சி அடைந்தபடி பேருந்தை விட்டு வேகமாக கீழே இறங்கினர். பின்னர் கண்டக்டரிடம் இது பற்றி கேட்ட போது, அவர் சரியான பதிலை அளிக்கவில்லை..


டிரைவரிடம் போய் கேட்ட போது, அந்த டிரைவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே திருப்பத்தூர் போக்குவரத்து பணிமனை அலுவலகத்துக்கு உடனடியாக பயணிகள் தகவல் தெரிவித்தனர். டிரைவரிடம் வாக்குவாதம் செய்த பயணிகள் இதற்கிடையே கண்டக்டரை விட்டுவிட்டு, டிரைவர் மட்டும் பஸ்சில் ஏறி அவசரம் அவசரமாக பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். இந்த முறை பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்து, மதுரை செல்லும் சாலையில் பேருந்தை டிரைவர் நிறுத்தியுள்ளார். இதனால் கோபம் அடைந்த பயணிகள் அவரிடம் வாக்குவாதம் செய்தனர், அப்போது டிரைவர் மது போதையில் உளறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்பத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பேருந்தை மீண்டும் பஸ் நிலையத்தில் நிறுத்திவிட்டு, பேருந்தில் இருந்து இறங்குமாறு டிரைவரிடம் தெரிவித்தனர். ஆனால் அவர், கீழே இறங்க மறுத்ததோடு, மானாமதுரைக்கு தானே பேருந்தை ஓட்டிச்செல்வதாக கூறி அடம்பிடித்தார்
பயணிகள் கடும் சிரமம் இதைத் தொடர்ந்து கண்டக்டர், பயணிகள், போலீசார் என அனைவரும் தொடர்ந்து கூறியதன்பேரில் கீழே இறங்கினார். இதற்கிடையே மாற்று டிரைவர் வரவழைக்கப்பட்டு, அந்த பேருந்து மானாமதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக அந்த பேருந்து புறப்பட்டு சென்றது. பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் பணிமனை மேலாளர் கூறுகையில், மானாமதுரை செல்லும் பேருந்தை டிரைவர் மனோகரன் மதுபோதையில் இயக்கியது தெரியவந்ததால், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மண்டல மேலாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்

தகவல் : ONEINDIA

banner

You may also like

Leave a Comment