திருவாரூர்: பூரண மதுவிலக்கு என்பது நம்முடைய தமிழகத்தில் கனவாகவே போய்க் கொண்டிருக்கிறது.. பூரண மதுவிலக்கை படிப்படியாக அரசு அமல்படுத்தலாம் என்று நீதிமன்றங்களும் கருத்து தெரிவித்தபடி உள்ளன.. இந்நிலையில், ஆங்காங்கே டாஸ்மாக் கடைகளில் நடக்கும் சம்பவங்கள், மதுப்பிரியர்களுக்கு கிலியையும், கலக்கத்தையும் தந்துவருகிறது. அந்தவகையில், திருவாரூரில் ஒரு கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ளது பெருமாளகரம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருகிறார் அந்த 40 வயது பெண்.. இவர் ஆடுகளை வளர்த்து, பிழைப்பு நடத்தி வருகிறார்

அத்துமீறி அட்டகாசம் 40 வயது பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டு, ஆற்று நீரில் மூழ்கடித்தது திருவிடைவாசல் பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் அஜித்குமார் என்பது தெரியவந்தது.. இதையடுத்து, 2 பேரையும் கைது செய்ய போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பரிதாபமாக உயிரிழந்த பெண் திருமணமானவர்.. கணவர் பெயர் மணிகண்டன்.. இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்களாம். இதில், மகன் 5-ம் வகுப்பு படிக்கிறார்.. மகள் 2ம் வகுப்பு படிக்கிறாராம். கொரடாச்சேரி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்து, நீரில் மூழ்கடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை திருவாரூர் மாவட்டத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.. வலுக்கும் கோரிக்கை பாண்டவையாறு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையால், இதுபோல பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் சொல்கிறார்கள்.. இத்தனை காலம் வெறும் பிரச்சனையாக மட்டுமே இருந்துவந்த நிலையில், தற்போது ஒரு கொலையே நடக்கும் அளவுக்கு மதுபோதை தலைதூக்கி வருவதாகவும் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
வலுக்கும் கோரிக்கை பாண்டவையாறு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையால், இதுபோல பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் சொல்கிறார்கள்.. இத்தனை காலம் வெறும் பிரச்சனையாக மட்டுமே இருந்துவந்த நிலையில், தற்போது ஒரு கொலையே நடக்கும் அளவுக்கு மதுபோதை தலைதூக்கி வருவதாகவும் குற்றஞ்சாட்டுகிறார்கள். அத்துடன் அந்த பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும், பெண்ணை கொடூரமாக கொன்றவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
தகவல் : ONEINDIA
