
மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞரின் புகைப்படத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி பொது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் சமூக வலைளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
பரபரப்பாக இயங்கும் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர்.
தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் போதை ஆசாமிகள்.
கஞ்சா 2.0, 3.0, 4.0 என வெற்று விளம்பரம் மட்டுமே செய்யும் ஸ்டாலின், இனிமேலாவது சட்டம் ஒழுங்கு மீது கவனம் செலுத்துவாரா? என்று டி.ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தகவல் : RAJNEWS
