Home Uncategorizedcheck-கஞ்சா போதை.. சரக்கு ரயிலின் அடியில் படுத்துக் கொண்ட மாணவர்கள்..

check-கஞ்சா போதை.. சரக்கு ரயிலின் அடியில் படுத்துக் கொண்ட மாணவர்கள்..

by bait
0 comments

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையம், எப்போதும் பரபரப்பாக இயங்கக் கூடிய ரயில் நிலையங்களில் ஒன்று.

இந்த ரயில் நிலையத்திற்கு, கஞ்சா பயன்படுத்திய மாணவர்கள் சிலர், நேற்று மாலை 5.30 மணிக்கு வந்துள்ளனர். திடீரென, அவர்களுக்கு இடையே, தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, அந்த மாணவர்கள், ரயில் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு, அட்டகாசம் செய்துள்ளனர். மேலும், அந்த மாணவர்களில் ஒருவன், சரக்கு ரயிலின் அடியில் படுத்துக் கொண்டு, ரகளையில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறையினர், மாணவர்களை பிடித்து, எச்சரித்து அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால், அரக்கோணம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

banner

தகவல் : RAJNEWS

You may also like

Leave a Comment