ஆந்திராவிலிருந்து நெல்லைக்குக் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான 220 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், கஞ்சா வியாபாரி போலீஸாரின் கைது நடவடிக்கைக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் முக்கிய போதை வஸ்துவான கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போலீஸாரும் இதனைத் தடுக்க முயன்று வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி, ஆந்திராவிலிருந்து நெல்லைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, நெல்லை – மதுரை நான்கு வழிச்சாலையில் பொட்டல் விலக்கு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு லோடு மினி வேனை நிறுத்த முயன்றனர். இதில், லோடு மினி வேனின் பின்னால் வந்த கார் நிற்காமல் அதிவேகத்துடன் சென்றது.

தற்கொலை செய்த கலைஞர் பாண்டியன்
தொடர்ந்து மினி வேனை மடக்கிப்பிடித்த போலீஸார், சோதனை நடத்தினர். அதில் 40 பார்சல்களில் 80 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக டிரைவர் நித்திஷ்குமார் மற்றும் அவரின் நண்பர் சுரேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
இதற்கிடையில், நெல்லை தச்சநல்லூரில் கேரள மாநிலப் பதிவெண் கொண்ட கார் சாலையில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த நிலையில், அக்காரின் கண்ணாடியை உடைத்து போலீஸார் சோதனையிட்டதில் 70 பார்சல்களில் 140 கிலோ கஞ்சா வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
தகவல் : VIKATAN
