இதுவரை சமூக விரோதிகளின் கைகளில் மட்டுமே புழக்கத்தில் இருந்த கஞ்சா, தற்போது சர்வ சாதாரணமாகப் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கைகளிலும் கிடைக்கிறது

’தமிழ்நாட்டின் தலைநகர், கஞ்சா போதையில் தள்ளாடத் தொடங்கியிருக்கிறது’ என அதிர்ச்சி கொடுக்கிறார்கள் போதை உலகை நன்கு அறிந்தவர்களும், காவல்துறையும். 2025 ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் இறுதி வரையிலான ஏழு மாதங்களில் மட்டும், சுமார் 700-க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவாகி, அவர்களின் வார்த்தைகளை உண்மை என உறுதிப்படுத்தியிருக்கின்றன!
சமீபத்தில் சென்னை புளியந்தோப்பில், மாணவர்களிடம் செல்போன் பறித்த இரண்டு நபர்களைக் கைதுசெய்தபோது, கஞ்சா போதையிலிருந்த அவர்கள், திடீரென போலீஸார்மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்திய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் காவல்துறையில் பணியாற்றும் பாரதி என்பவரின் கணவர் இளவரசன், கஞ்சா போதையில் தன் மனைவியை அரிவாளால் தாக்கிய சம்பவம்… சென்னை திருப்போரூரிலிருந்து பாரிமுனைக்குச் செல்லும் அரசுப் பேருந்து நடத்துனர் மோதியை, கஞ்சா போதை இளைஞர்கள் சரமாரியாகத் தாக்கிய சம்பவம், சென்னை மருத்துவக் கல்லூரி விடுதியில் பயிற்சி மருத்துவர்கள் மூன்று பேர் கஞ்சா போதையில் செய்த கலாட்டா என… சென்னையில் கஞ்சா போதையில் நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன.
தகவல் : VIKATAN
