Home ஒன் இந்தியாமண்டைக்கேறிய மதுபோதை.. திமுக சேர்மனின் விபத்து நாடகம்! பெட்டிசன் போட்டவரை கொன்ற கொடூரம்.. ஷாக்!

மண்டைக்கேறிய மதுபோதை.. திமுக சேர்மனின் விபத்து நாடகம்! பெட்டிசன் போட்டவரை கொன்ற கொடூரம்.. ஷாக்!

by bait
0 comments

திருப்பூர்: திருப்பூர் அருகே மது போதையில் பேரூராட்சி தலைவர் இயக்கிய வாகனம் மீது மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பேரூராட்சி தலைவரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அது கொலை என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சாலைப் பணி முறைகேடு குறித்து புகார் மனு அளித்தவரை பேரூராட்சி சேர்மன் காரை ஏற்றி கொலை செய்த உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சாமளாபுரம் பேரூராட்சி தலைவராக இருப்பவர் விநாயகா பழனிச்சாமி. திமுகவைச் சேர்ந்த இவர் நேற்று பிற்பகல் தனது சொகுசு காரில் காரணம்பேட்டையில் இருந்து தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

கருகம்பாளையம் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் முதியவர் ஒருவர் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்பொழுது அதிவேகமாக வந்த பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமியின் கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

பேரூராட்சி தலைவர் விபத்தை ஏற்படுத்திய பேரூராட்சி தலைவர் வாகனத்தை நிறுத்தாமல் சென்று விட்டார். இந்த விபத்தைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் அவரை பரிசோதனை செய்த பொழுது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த மங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இறந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பது தெரியவந்தது.

banner

மதுபோதையில் விபத்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குடிபோதையில் இந்த விபத்தை ஏற்படுத்திய பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமியை மங்கலம் போலீசார் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்து தொடர்ந்து அவரை மருத்துவ பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து மது போதையில் விபத்து ஏற்படுத்துதல் வழக்கின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

திருப்பூர் கொலை அந்த விசாரணையில் தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. உண்மையில் மது போதையில் நடந்த விபத்து அல்ல, அது திட்டமிட்ட படுகொலை என்ற அதிர்ச்சித் தகவல் தான் தற்போது வெளியாகி உள்ளது. திமுக சாமலாபுரம் பேரூராட்சி தலைவரான விநாயகா பழனிச்சாமி பொதுமக்களுக்குப் பயன் இல்லாத வகையில் தனியார் இடத்தில் ஒருவருக்குச் சாதகமாகச் சாலை அமைத்துக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

சாலை முறைகேடு இதை அடுத்து இந்த முறைகேடு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழனிசாமி புகார் அளித்துள்ளார். இதனால் பழனிசாமிக்கும், சேர்மன் விநாயகா பழனிசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் பழனிசாமிக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. போலீஸ் விசாரணை தொடர்ந்து விநாயகா பழனிச்சாமியின் முறைகேடு குறித்து விசாரணை நடத்த பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்ட நிலையில், தன்னை மாட்டிவிட்ட பழனிச்சாமியை கொலை செய்யத் திட்டமிட்டு இருக்கிறார் திமுக சேர்மன் விநாயகா பழனிச்சாமி. இதை அடுத்து மது போதையில் அவரை காரை ஏற்றி கொலை செய்தது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

தகவல் : ONEINDIA

You may also like

Leave a Comment