Home Uncategorizedவிடிய விடிய போதை ஆட்டம்.. கன்னியாகுமரி ரிசார்ட்டில் பர்த்டே பார்ட்டி.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்

விடிய விடிய போதை ஆட்டம்.. கன்னியாகுமரி ரிசார்ட்டில் பர்த்டே பார்ட்டி.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்

by bait
0 comments

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தில் உள்ள ராமனாதிச்சன்புதூரில் தனியார் ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள், வெளிநாட்டு மது வகைகள், கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்றவற்றைக் கொண்டு விடிய விடிய போதை விருந்து நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விழாவில், இளைஞர்கள், இளம்பெண்கள் என 80 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இளைஞர்களைக் குறிவைத்து போதைப் பொருள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் போதைப் பொருள் புழக்கமும், அதனால் சமூக விரோத சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. இந்நிலையில், கன்னியாகுமரியில் இளைஞர்கள், இளம்பெண்கள், வெளிநாட்டினர் என 80 பேர் பங்கேற்ற பிறந்த நாள் பார்ட்டியில் விடிய விடிய தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களைக் கொண்டு விருந்து வைத்துள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே உள்ள ராமனாதிச்சன்புதூரில் பிரைவேட் சொகுசு ரிசார்ட் ஒன்று உள்ளது. இயற்கை எழில் கொட்சும் ரம்மியமான பகுதியில் அமைந்துள்ள இந்த ரிசார்ட்டில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து தங்குவது வழக்கும். இங்கு பிறந்த நாள் விழா போன்ற தனியார் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், குலசேகரம் பகுதியைச் சேர்ந்த 34 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது மகளின் பிறந்த நாளை நடத்த திட்டமிட்டுள்ளார்.

தகவல் : ONEINDIA

banner

You may also like

Leave a Comment