Home Uncategorizedபடிக்கும் புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி” – எடப்பாடி பழனிசாமி

படிக்கும் புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி” – எடப்பாடி பழனிசாமி

by bait
0 comments

சென்னை-திருத்தணி ரயிலில் 17 வயது சிறுவர்கள் அரிவாளால் தாக்கிய சம்பவம் குறித்து எடப்பாடி பழனிசாமி திமுக அரசு மற்றும் மு.க. ஸ்டாலின் மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“அரிவாளால் தாக்கிய சிறுவர்கள், கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. வெறும் 17 வயதுள்ள சிறுவர்கள் கையில் போதைப்பொருளும், அரிவாளும் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு? இந்த முதல்வர் தானே?” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் ரயிலில், கத்தியுடன் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த 17 வயதுள்ள 4 சிறுவர்களைத் தடுத்த சுராஜ் என்ற வடமாநில இளைஞரை, சிறார்கள் அரிவாளால் சரமாரியாக கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இந்த தாக்குதல் தொடர்பான காணொளியைக் காண நெஞ்சம் பதைக்கிறது. படிக்கும் புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி வந்திருப்பது வெட்கக்கேடானது. தமிழ்நாட்டை இப்படி ஒரு கொடூர நிலைக்கு ஸ்டாலினின் திமுக அரசு தள்ளிவிட்டதே என்ற கோபம் தான் மேலோங்குகிறது.

banner

தகவல் : NEWS18TAMIL

You may also like

Leave a Comment