சேலம் கலெக்டர் அலுவலகம் வந்த முத்துலட்சுமி கஞ்சா பொட்டலுடன் பிடிபட்டு, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கஞ்சா பொட்டலத்துடன் வந்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பெண்ணிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சேலம் கலெக்டர் அலுவலகம், எப்போதும் போல திங்கள் கிழமையன்று பரபரப்பாக இயங்க தொடங்கியது. மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில், கலெக்டரை சந்தித்து மனு அளிக்க ஏராளமான பொதுமக்கள் வந்து கொண்டே இருக்கே, போலீசார் பலத்த பாதுகாப்புடன் அவர்களைச் சோதனை செய்து உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது மஞ்சப்பையுடன் வந்த பெண் ஒருவர், கலெக்டர் அலுவலக அறையை நோக்கி வேக வேகமாக நடந்து சென்றார். அதில் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி பையைச் சோதனை செய்தனர்.
தகவல் : NEWS18TAMIL
