அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் கரும்பக்கடைப் பகுதியைச் சேர்ந்த அனீஸ் மற்றும் ஆசிக் என்பது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்த இருவர் மீதும் ஏற்கெனவே கஞ்சா வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று காலை விமானம் மூலம் வருகை புரிந்தார்.
கோவை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன் மற்றும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது கோவை மாநகராட்சி அலுவலகம் அருகே, துணை ஜனாதிபதி வாகனங்கள் சென்ற சாலையில் இருசக்கர வாகனத்தில் இருவர் அங்கும் இங்கும் சென்றுள்ளனர். இதனால் பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டதாகக் கூறி பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் கரும்பக்கடைப் பகுதியைச் சேர்ந்த அனீஸ் மற்றும் ஆசிக் என்பது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்த இருவர் மீதும் ஏற்கெனவே கஞ்சா வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
தகவல் : INDIANEXPRESS