காரைக்குடி : காரைக்குடி அருகே இரவில் பள்ளிக்குள் நுழைந்த மர்மநபர்கள் மது அருந்தி விட்டு சத்துணவு முட்டைகளை அவித்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ஆலங்குடி மேலமாகாணத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது.
இங்கு அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் வகுப்பறைகளை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.