கோவையில் கல்லுாரி மாணவியுடன் பழகுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், கல்லுாரி மாணவர் ஒருவர் போதை ஊசி ஏற்றி கொல்லப்பட்டுள்ளார் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலையில் 2 கல்லுாரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஓராண்டாக கோவையில் கொலை, திருட்டு, பாலியல் வழக்கு மற்றும் போதைப் பொருள் விற்பனை என பல்வேறு குற்றங்கள் தொடர்பாக ஏராளமான கல்லுாரி மாணவர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளதாகக் கூறும் காவல்துறையினர், கல்லுாரி நிர்வாகங்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இதைத் தடுக்க முடியுமென்கின்றனர். ஆனால் தனியார் கல்லுாரி நிர்வாகங்கள் போதை ஒழிப்பில் தனி கவனம் செலுத்தி, காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக சுயநிதிக் கல்லுாரிகள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
தகவல் : BBC
