Home Uncategorizedமது போதையில் ஆபாச நடனம்… அர்ச்சகர்கள் மீது அதிரடியாக பாய்ந்த நடவடிக்கை!

மது போதையில் ஆபாச நடனம்… அர்ச்சகர்கள் மீது அதிரடியாக பாய்ந்த நடவடிக்கை!

by bait
0 comments

போதையில் ஆபாச நடனமாடிய ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் அர்ச்சகர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அர்ச்சகர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

விருதுநகர்ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர்கள் ஆபாசமாக நடனமாடிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களை பணியிடை நீக்கம் செய்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறை பாராமரிப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது பெரிய மாரியம்மன் திருக்கோயில். இங்கு கோமதிவிநாயகம் (30) என்பவர் உதவி அர்ச்சகராக பணியாற்றி வருகிறார். இக்கோயிலில், ஒவ்வொரு பங்குனி மாதமும் பொங்கல் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், கோயில் குடமுழுக்கு விழா பணிக்காக வந்த அர்ச்சகர்கள் சிலர், கோமதிவிநாயகம் வீட்டில் தங்கியுள்ளனர். அப்போது, அவர்கள் குடித்து விட்டு மதுபோதையில் ஆபசமாக நடனமாடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பக்தர்களை முகம் சுழிக்க வைத்தது.

banner

அது மட்டுமின்றி, கோயிலுக்கு வரும் பெண் பக்தர்கள் மீது விபூதி அடித்து விளையாடுவது போன்ற காட்சிகளும் இணையத்தில் தீயாக பரவி, கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும், அர்ச்சகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் ஜூலை 2 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ள நிலையில், உதவி அர்ச்சகர் கோமதிவிநாயகம், கோயில் பணிக்கு வந்த கணேசன், வினோத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஆபாச நடனமாடிய அர்ச்சர்கள் மீதும், அந்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் பரப்பிய கோயில் முன்னாள் அர்ச்சகர் ஹரிஹரன் மகன் சபரிநாதன் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாகியுள்ள அர்ச்சகர்களை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தை விசாரித்த கோயில் செயல் அலுவலர் சர்க்கரை அம்மாள், வீடியோவில் ஆபாசமாக நடனமாடிய 3 அர்ச்சகர்களையும் பணியிட நீக்கம் செய்து உத்தவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, கோயில் பணியாளர் கார்த்திக் மீதும் புகார் எழுந்துள்ள நிலையில், விசாரணை செய்து அவர் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

தகவல் : ABPNEWS

You may also like

Leave a Comment