Home Uncategorizedவிஸ்வரூபம் எடுக்கும் போதைப்பொருள் விவகாரம்.. சிக்கிய நடிகர் கிருஷ்ணா -தேடுதல் வேட்டையில் தனிப்படை!

விஸ்வரூபம் எடுக்கும் போதைப்பொருள் விவகாரம்.. சிக்கிய நடிகர் கிருஷ்ணா -தேடுதல் வேட்டையில் தனிப்படை!

by bait
0 comments

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிரபல நடிகர் கிருஷ்ணாவை விசாரணைக்கு ஆஜராக காவல்துறை உத்தரவிட்டிருந்த நிலையில் தற்பொழுது அவர் தலைமறைவாகியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் பார் ஒன்றில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது இந்த மோதலில் அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பிரசாத் உள்ளிட்ட ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்தனர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொக்கைன் என்னும் போதே பொருள் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தது இதனை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டன அதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் குமார் என்பவரிடம் இருந்து அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பிரசாத் கொக்கை போதை பொருள் வாங்கியது தெரியவந்தது.

நடிகர் ஸ்ரீகாந்த் கைது

இதனை அடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடிகர் ஸ்ரீகாந்தை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்து சென்றனர் அப்போது ஸ்ரீகாந்த் இடம் நடத்தப்பட்ட விசாரணைகள் நான் போதைப்பொருள் பயன்படுத்தியது கிடையாது என்று கூறினார். இதில் சந்தேகமடைந்த காவல்துறையினர் உடனடியாக அவருக்கு ரத்த பரிசோதனை மற்றும் தடையவியல் நிபுணர்களுடன் பரிசோதனை மேற்கொண்டன. தொடர்ந்து இந்த பரிசோதனைகள் அவர் கோகையின் போதை பொருள் பயன்படுத்தியதும் கைரேகையில் இருந்து 50 கிராம் போதை பொருள் தூள்கள் கிடைத்தது. இதனை அடுத்து நடிகர் ஸ்ரீகாந்த் வீட்டை காவல்துறையினர் சோதனை செய்தனர் அதில் ஒன்பது காலியான கோக்கன் பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பரபரப்புவாக்குமூலம்அளித்தஸ்ரீகாந்த்

banner

இதனைத் தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்தை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தினர் அப்பொழுது பிரசாத் தன்னை வைத்து படம் இயக்கியதாகவும், தனக்கு 10 லட்சம் ரூபாய் பாக்கி தரவேண்டும் என்று நடிகர் ஸ்ரீகாந்த் கூறி உள்ளார். மேலும் தனக்கு தரவேண்டிய 10 லட்சம் ரூபாய் பணத்தை கேட்கும்பொழுது எல்லாம் கொக்கின் போதை பொருள் கொடுத்ததாக கூறினர். இதனை மூன்று முறை பயன்படுத்தியதற்கு பிறகு தான் முழுமையாக அடிமையானதாக நடிகர் ஸ்ரீகாந்த் பரபரப்பு வாக்கு மூலம் அளித்தார்.

நடிகர்கிருஷ்ணாவைபிடிக்கதனிப்படைஅமைப்பு

இதில் பல்வேறு முக்கிய நபர்கள் தொடர்பு இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்தனர் .தொடர்ந்து விசாரணை நடத்தியதில் கழுகு பட நடிகர் கிருஷ்ணா அவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது குறித்து விசாரிக்க கிருஷ்ணாவை செல்போனில் காவல்துறையினர் அழைத்து உள்ளனர். அப்போது நடிகர் கிருஷ்ணா கேரளாவில் படப்பிடிப்பில் இருப்பதாகவும் , விசாரணைக்கு வருவதாகவும் கூறினார்.ஆனால் தற்பொழுது நடிகர் கிருஷ்ணாவின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை ப்டிக்க காவல்துறையினர் தரப்பில் தனிப்படை அமைத்து தேடுத்தல் வேட்டையில் இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment