Home Uncategorizedதிண்டுக்கல்லில் அதிக விலையில் மது விற்பனை; குடிமகன்களின் அதிரடி நடவடிக்கை ?

திண்டுக்கல்லில் அதிக விலையில் மது விற்பனை; குடிமகன்களின் அதிரடி நடவடிக்கை ?

by bait
0 comments

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதலாக பத்து ரூபாய் பெறுவதாக குடிமகன்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் அவர்களை கடையின் ஊழியர் மிரட்டிய வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது

கொரலப்பட்டி அரசு மதுபான கடை
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாதர்மத்துப்பட்டி ஊராட்சி கொரலப்பட்டி என்ற பகுதியில் 3303 என்றஅரசு மதுபான கடை செயல்பட்டு வருகின்றது. இந்த கடையில் சூப்பர்வைசர் பூமிராஜ் என்பவர் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் இன்று தர்மத்துப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் உள்ள குடிமகன்கள் மதுபான கடை திறந்தவுடன் வழக்கம் போல மதுபானங்களை வாங்குவதற்காக வந்துள்ளனர்.

அரசுநிர்ணயித்தவிலையைவிடகூடுதல்விலை
அப்போது சூப்பர்வைசர் அரசு நிர்ணயித்த விலையை விட பத்து ரூபாய் கூடுதலாக குடிமகன்களிடம் தொடர்ந்து வாங்கி வந்துள்ளார். அதனை தொடர்ந்து அதில் குடிமகன்கள் பத்து ரூபாய் வாங்க கூடாது என அரசு அறிவித்துள்ளது யாருக்காக வாங்குகிறீர்கள் என்று கேட்ட பொழுதுமதுபான பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக தான் விற்பனை செய்வேன் யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக் கொள் என்று மிரட்டியுள்ளார்.

குடிமகன்களைஆபாசமாகபேசியஉழியர்
அதனை தொடர்ந்து குடிமகன்களை ஆபாசமாக பேசியும் உள்ளா. மேலும் மதுபான கடையில் தனி நபர்களை பணியில் அமர்த்தியுள்ளார் அவர்களும் தங்கள் பங்கிற்கு கேள்வி கேட்கும் குடிமகன்களை ஆபாசமாக திட்டுவதும் எங்கு வேண்டுமானாலும் சொல்லுங்கள் என்று மிரட்டியும் உள்ளனர்.

ஏமாற்று ரசீதை எழுதிக் கொடுத்த சூப்பர்வைசர்
மேலும் குடிமகன்கள் நாங்கள் வாங்கிய பாட்டில்களுக்கு உரிய ரசீது வழங்குங்கள் என்று கேட்ட பொழுது கடையின் சூப்பர்வைசர் பூமி ராஜ் ரசீது ஒன்றை வழங்கியுள்ளார் அதில் எவ்வளவு தெளிவாக இருக்க வேண்டுமோ அவ்வளவு தெளிவாக யாருக்கும் புரியாத அளவிற்கு ஏமாற்று ரசீதை எழுதிக் கொடுத்ததுள்ளார். அது குடிமகன்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் அரசு மதுபான கடைகளில் கூடுதலாக பத்து ரூபாய் பாட்டிலுக்கு விற்பனை செய்வதாக துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேட்டும் தொடர்ந்து செய்தியும் வெளியிட்டனர். இந்நிலையில் அரசு மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு விற்றால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

சூப்பர்வைசர் விற்பனை செய்து மிரட்டும் வீடியோ
ஆனால் தற்போது அந்த அறிவிப்பை அரசு காற்றில் பறக்க விட்டு ஊரகத்துறை அமைச்சர் தொகுதியிலேயே பத்து ரூபாய் கூடுதல் விலைக்கு சூப்பர்வைசர் விற்பனை செய்து மிரட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்கள் பரவி வைரலாகி வருகின்றது.

banner

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment