Home Uncategorizedஇந்த நாட்களில் மது கடைகள் இயங்காது.. புதுச்சேரி அரசு உத்தரவு!

இந்த நாட்களில் மது கடைகள் இயங்காது.. புதுச்சேரி அரசு உத்தரவு!

by bait
0 comments

புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 17 முதல் 19ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணும் நாளான ஜூன் 4ஆம் தேதியும் அனைத்து விதமான மதுபானக்கூடங்கள், கடைகளை மூட புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

வாக்குப்பதிவு
தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்காக காவல்துறை உதவி உடன் துணை ராணுவ படையினரும் புதுச்சேரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்களிடையே மோதல் போக்கை தவிர்க்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.

மதுபான கடைகள் மூடல்
இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள அனைத்து விதமான மதுபானக்கூடங்கள் கடைகளை மூடவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் வாக்குப்பதிவு நாளை முன்னிட்டு ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கும், வாக்கு எண்ணும் ஜூன் 4ஆம் தேதியும் அனைத்து விதமான மதுபான கடைகளை மூட கலால் துறை உத்தரவை அடுத்து அரசாணை வெளியிட்டுள்ளது.

மாஹி பிராந்தியம்
அதேபோல் கேரளாவில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதனை ஒட்டி உள்ள புதுச்சேரி பிராந்தியமான மாஹி பகுதியில் ஏப்ரல் 24 முதல் 26 ஆம் தேதி வரையும்,

banner

ஏனாம்
ஆந்திர பிரதேசத்தை ஒட்டி உள்ள புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் பகுதியில் மே 11ம் தேதி முதல் 13ம் தேதி வரையும் மற்றும் வாக்கு எண்ணும் தேதியான ஜுன் 4ஆம் தேதியும் அனைத்து விதமான மதுபானக்கூடங்களுக்கு மூட உத்தரவிட்டு காவல்துறை உத்தரவிட்டதை அடுத்து புதுச்சேரி அரசு அதனை அரசு இதழில் வெளியிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment