திருச்சியில் பிளாக்கில் மதுபானம் வாங்கி குடித்த நபர், உடல் நலம் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புதுஉத்தமனூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு, மீண்டும் காலை 8 மணிக்கு வீடு திரும்பியுள்ளார்.
வயிற்று வலி
மனைவியுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், திடீரென பிரபாகரனுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. கழிவறையில் சிறுநீர் கழித்த போது சிறுநீருடன் ரத்தம் வெளியேறியுள்ளது. இதனால் வலியால் பதறினார்.
லால்குடி அரசு மருத்துவமனை
உடனடியாக அருகில் இருந்த லால்குடி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், திடீரென மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டு துடித்துள்ளார்.திருச்சி அரசு மருத்துவமனை
உடனே மருத்துவரின் ஆலோசனைப்படி, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
மதுபான கடை
இந்த சம்பவம் குறித்து பிரபாகரனின் மனைவி, லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், அதிகாலை 3 மணி அளவில், தனது கணவர் பூவாளூர் பின்னவாசல் அரசு மதுபான கடைக்கு சென்று பிளாக்கில் மது வாங்கி குடித்ததாகவும், அதன் பிறகே வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இது குறித்து லால்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தகவல் : TAMILSAMAYAM
