தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கஞ்சா கடத்தல் ஈடுபட்ட 6 பேர் கைது கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களும் பறிமுதல்தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் கஞ்சா விற்பனை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது இதனை தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கைககளை எடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து புளியங்குடி அருகே காட்டுப் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது இந்த நிலையில் அந்த பகுதியை புளியங்குடி டிஎஸ்பி அசோக், காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். அப்பொழுது 10 பேர் கொண்ட கும்பல் கஞ்சாவை விற்பனைக்காக பிரித்து பொட்டலம் போட்டுக் கொண்டிருக்கும் பொழுது காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்தனர் மேலும் 4 பேர் தப்பி ஓடி விட்டனர்.இதில் விற்பனைக்காக கஞ்சா கடத்திய 10 பேரில் வாசுதேவநல்லூர் உள்ளார் பகுதியை சேர்ந்த காசிதுரை,புளியங்குடியை சேர்ந்த மருதுபாண்டி,கிருபாகரன்,விக்னேஷ்,ராஜேஷ் ,திருப்பதி ஆகிய 6 பேர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
தகவல் : TAMILSAMAYAM