Home Uncategorizedதூத்துக்குடி: கஞ்சாவுடன் வாலிபர் கைது

தூத்துக்குடி: கஞ்சாவுடன் வாலிபர் கைது

by bait
0 comments

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே தனியார் ஓட்டல் முன்பாக ஒரு வாலிபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தீவிரக் கண்காணிப்பு

தொடர்ந்து, தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐயப்பன், நகர தனிபடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் விரைந்து சென்று, தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

தப்பிஓடமுயற்சி

அப்போது போலீசாரை கண்டதும் சுதாரித்துக் கொண்ட ஒரு வாலிபர் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓட முயன்றார். உடனே அந்த வாலிபரை சுற்றி வளைத்த போலீசார் அவரை பரிசோதித்த போது அவரிடம் பைகளில் 1 1/2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

பறிமுதல்

banner

அதனை பறிமுதல் செய்த போலீசார், தாளமுத்துநகர், டி.சவேரியார்புரம் ஹவுசிங் போர்டை சேர்ந்த மணிகண்டனை (33) கைது செய்து அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தகவல் : TAMILSAMAYAM

You may also like

Leave a Comment