Home Uncategorizedதலைக்கேறிய போதையில் அசுர வேகத்தில் கார் ஓட்டிய இளைஞர்.. பல்லாவரத்தில் கொடூர விபத்து.. ஐடி இளம்பெண் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலி

தலைக்கேறிய போதையில் அசுர வேகத்தில் கார் ஓட்டிய இளைஞர்.. பல்லாவரத்தில் கொடூர விபத்து.. ஐடி இளம்பெண் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலி

by bait
0 comments

மது அருந்திவிட்டு வேகமாக கார் இயக்கியதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், ஐடி இளம்பெண் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் கிருத்திகா (26), ஸ்ரீதர்‌ (29), அபிஷா (26) மற்றும் இவர்களது நண்பரான பங்கஜ் (18) ஆகிய நான்கு பேர் துரைப்பாக்கம் – பல்லாவரம் ரேடியல் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர்.

விபத்துக்குள்ளானதும் காரின் பின் கதவு திறந்ததால் பின்னால் அமர்ந்திருந்த கிருத்திகா சாலையில் விழுந்து பின்னர் சதுப்பு நிலத்தில் விழுந்துள்ளார். தகவல் அறிந்த பள்ளிக்கரணை போலீசார் மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சதுப்பு நிலத்தில் விழுந்த கிருத்திகாவை மீட்டு பரிசோதித்ததில் சம்பவ இடத்திலேயே ஐடி பெண் ஊழியர் கிருத்திகா உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

தகவல் : TAMILSAMAYAM

banner

You may also like

Leave a Comment