தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பது தெரியவந்துள்ளத
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் கணபதி நகரை சேர்ந்தவர் ஆனந்தன். இவருக்கு சொந்தமாக 30க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கும் நிலையில், அவற்றை வாடகைக்கு விட்டுள்ளார். இவரது வீட்டில் குடியிருக்கும் இளைஞர்கள் சிலர் செல்போனில் யாரிடமோ கெட்டவார்த்தைகளை பேசி சண்டை போட்டுள்ளனர். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் சந்திரலேகா என்ற பெண், கெட்டவார்த்தைகள் பேச வேண்டாம் என்று கண்டித்து இருக்கிறார்.
இதனால் போதையில் இருந்த இளைஞர்கள், அரிவாளை எடுத்துக்கொண்டு சந்திரலேகாவின் வீட்டிற்குள் புகுந்து அவரை வெட்டியுள்ளனர். இதை தடுக்க வந்த அவரது மகனையும் வெட்டியுள்ளனர். இருவரின் சத்தம்கேட்டு பக்கத்து வீட்டினர் ஓடி வந்து தடுக்க அவர்களையும் அந்த கும்பல் கண்மூடித்தனமாக வெட்டினர். இதில் சீதாலட்சுமி, அவரது மகன் காமேஷ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
தகவல் : NEWS18TAMIL
