Home Uncategorizedபீகாரில் இருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் கடத்தல் – சென்னையில் வடமாநில கும்பல் கைது

பீகாரில் இருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் கடத்தல் – சென்னையில் வடமாநில கும்பல் கைது

by bait
0 comments

கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் கடத்தி, சென்னை புளியந்தோப்பில் சப்ளை செய்து வந்த வட மாநில கும்பல் போலிசில் சிக்கியதால் உள்ளூர் கஞ்சா புள்ளிங்கோக்கள் கிரக்கத்தில் உள்ளனர்.

பீகாரில் இருந்து ரயில் மூலம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் கடத்தி, சென்னை புளியந்தோப்பில் சப்ளை செய்து வந்த வட மாநில கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். பள்ளி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்று வந்த கும்பலின் பின்னணி என்ன?

போதை மாத்திரைகள் அதிகளவில் விற்கப்படுவதாக எழுந்த புகாரில் போலீசார் நடத்திய தேடுதலில் வட மாநில கும்பல் வசமாக சிக்கியது. ஆட்டோ ஓட்டுநரால் சிக்கிய கும்பலின் மீது அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை என்ன?

சென்னை பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போதை மாத்திரைகளின் புழக்கம் தலைவிரித்தாடுவதாக போலீசாருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. கோடை விடுமுறையில் ஊர் சுற்றும் பள்ளி மாணவர்களும், போதை மாத்திரைகளுக்கு அடிமையாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

banner

இதனால் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார், பேசின் பிரிட்ஜ் முழுக்க தீவிர தேடுதலில் இறங்கினர். ரோந்து சோதனையை பலப்படுத்த, போலீசார் நினைத்தது போலவே போதை மாத்திரை கும்பல் வசமாக சிக்கியது.

சிவந்த கண்களோடு அரை போதை மயக்கத்தில் ஆட்டோ ஓட்டி வந்த தண்டையார்பேட்டையைச் சேர்ந்த குண்டு முருகனை மடக்கி பிடித்து விசாரித்தனர். திறு திறுவென்று முழித்தவரை ஓரமாக நிற்க வைத்து ஆட்டோவில் சோதனையிட கஞ்சா பொட்டலங்கள் சிக்கியது. இதனால் பெரும் சந்தேகம் அடைந்த போலீசார் குண்டு முருகனை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

தகவல் : NEWS18TAMIL

You may also like

Leave a Comment