கஞ்சா வைத்திருந்த வழக்கில் 4ம் முறையாக மேலும் 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவலை வரும் ஜூலை 3ம் தேதி வரை நீட்டித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் 4ம் முறையாக சவுக்கு சங்கருக்கு மேலும் 15 நாள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 3ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து
மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யூடியுபர் சவுக்கு சங்கர் தேனி மாவட்டத்தில் தங்கியிருந்த போது தனது அறையில் 2.5கிலோ கஞ்சா வைத்திருந்ததாக பழனிசெட்டிபட்டி காவல்துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி முதல் நீதிமன்ற காவல் விடுத்து உத்தரவிட்டு இருந்த நிலையில், 3ம் முறையாக கடந்த ஜூன் 5ம் தேதி 15நாள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.
தகவல் : NEWS18TAMIL
