சேலத்தில் பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலத்தைச் சேர்ந்த சபீர், பாலாஜி, கோகுலநாதன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பின்போது பாலாஜி, கோகுலாதன் இருவரும் தங்களிடம் இருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிளான ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுக்களை சபீரிடம் கொடுத்துள்ளனர்.
பழைய ரூபாய் நோட்டுக்களை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றித்தருவதாக சபீர் தெரிவித்ததின்பேரில், இருவரும் அவரை நம்பி பணத்தை கொடுத்துள்ளனர். ஆண்டுகள் பல கடந்தும் ரூபாய் நோட்டுகளை சபீர் மாற்றிக் கொடுக்கவில்லை. இதனிடைடையே பணத்தை கொடுத்தவர்களில் பாலாஜி என்பவர் உயிரிழந்து விட்டார்.
தகவல் : NEWS18TAMIL
