Home Uncategorizedகஞ்சா பொட்டலத்துடன் முதலமைச்சரிடம் மனு… பாஜக பிரமுகருக்கு ஜாமின்

கஞ்சா பொட்டலத்துடன் முதலமைச்சரிடம் மனு… பாஜக பிரமுகருக்கு ஜாமின்

by bait
0 comments

சங்கர் பாண்டி மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவனியாபுரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட நீதிபதி உத்தரவு

முதலமைச்சர்மு.க.ஸ்டாலினிடம்கஞ்சாபொட்டலத்துடன்மனுஅளிக்கமுயன்றுகைதானநபருக்குமதுரைமாவட்டநீதிமன்றம்நிபந்தனையுடன்பிணைவழங்கிஉள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி மற்றும் குடும்பத்தினரோடு கொடைக்கானல் செல்வதற்காக கடந்த 29ம் தேதி மதுரை விமான நிலையத்து சென்றார். அப்போது முதலமைச்சரிடம் மனு கொடுப்பதற்காக கஞ்சா பொட்டலத்துடன் பாஜக ஓபிசி அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர் பாண்டி வந்திருந்த நிலையில், அதனை முதலமைச்சரிடம் கொடுக்க முயன்ற அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், தொடர்ந்து போலீசாருடன் வாக்குவாதம் செய்ததை அடுத்து அவரிடம் இருந்த மனு மற்றும் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

தகவல் : NEWS18TAMIL

banner

You may also like

Leave a Comment