Home Uncategorizedவீட்டை லாட்ஜாக மாற்றிய நடிகர் கஞ்சா கருப்பு.. வீட்டின் உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார்!

வீட்டை லாட்ஜாக மாற்றிய நடிகர் கஞ்சா கருப்பு.. வீட்டின் உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார்!

by bait
0 comments

நடிகர் கஞ்சா கருப்பு 3 லட்சம் வாடகை பாக்கி வைத்ததாகவும், வீட்டை லாட்ஜாக மாற்றியதாகவும், உரிமையாளர் ரமேஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் கஞ்சா கருப்பு 3 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளதாகவும் வீட்டை லாட்ஜாக மாற்றிவிட்டதாகவும் வீட்டின் உரிமையாளர் காவல்நிலையத்தில் புகாரளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான கஞ்சா கருப்பு சென்னை, மதுரவாயல் கிருஷ்ணா நகர் பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் வசித்து வருவதாக கூறப்படுகிறது. சென்னையில் சூட்டிங் நடக்கும் போது நடிகர் கஞ்சா கறுப்பு இந்த வீட்டில் வந்து தங்குவதாக தெரிகிறது. இந்நிலையில் கஞ்சா கருப்பு 3 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளதாகவும், வீட்டை வேறு ஒரு நபருக்கு உள்வாடகைக்கு விட்டு, மதுபானம் மற்றும் தகாத சம்பவங்கள் நடப்பதாகவும் வீட்டின் உரிமையாளர் ரமேஷ் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தகவல் : NEWS18TAMIL

banner

You may also like

Leave a Comment