Home Uncategorizedகஞ்சா விற்ற காசு எங்கே..?” பள்ளி மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய போதை இளைஞர்கள்

கஞ்சா விற்ற காசு எங்கே..?” பள்ளி மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய போதை இளைஞர்கள்

by bait
0 comments

சிதம்பரத்தில் கஞ்சா கும்பல் பள்ளி மாணவர்களை சித்ரவதை செய்த வீடியோ வெளியானது. கும்பல் தலைவர்கள் விமல்ராஜ், சிவா, வினோத்குமார் கைது. மாணவர்களை கஞ்சா விற்று பணம் சம்பாதிக்கச் செய்தனர்.

சிதம்பரத்தில் பள்ளி மாணவர்களை அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த கஞ்சா இளைஞர்களின் பகீர் வீடியோ வெளியாகி நடுங்க வைத்துள்ளது. 

சிதம்பரம் ஓமக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உடப்பு சிவா, வினோத்குமார். கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான இவர்கள் கஞ்சா விற்கும் கும்பலைச் சேர்ந்த விமல்ராஜின் கூட்டாளிகள். கஞ்சா புகைப்பது, அதை பொட்டலம் போட்டு கைமாற்றி கல்லா கட்டுவது இதுவே இவர்கள் முழு நேர தொழில். இவர்களிடம் கூட்டத்தில் நவீன்ராஜும் ஒரு முக்கிய புள்ளிதான். உள்ளூரில் கஞ்சா விற்று வந்த இவர்கள் போலீசாரின் கெடுபிடியால், தங்களிடம் கஞ்சா வாங்கி புகைத்த சில பள்ளி மாணவர்களையும் கஞ்சா விற்கும் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர்.

அப்படிதான் இந்த இரு மாணவர்களும் இவர்களிடம் சிக்கியுள்ளனர். கஞ்சா பொட்டலங்களை மாணவர்களிடம் கொடுத்து அனுப்பி பள்ளிக்கூடத்தில் விற்று வர சொல்லியிருக்கிறார்கள். விற்று கொடுத்தால் பணம் கிடைக்கும் என நினைத்த மாணவர்கள் கஞ்சாவை விற்று நிறைய பணம் சம்பாதித்துள்ளனர். ஆனால் அந்த பணத்தை கஞ்சா சப்ளை கும்பலிடம் ஒப்படைக்காமல் ஆட்டைய போட முயன்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் ஆக்ரோஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.

banner

வாடகை அறைக்கு இரு பள்ளி மாணவர்களையும் வரவழைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். கதவை பூட்டி வைத்து கன்னம் கன்னமாக அறைந்து மாணவர்களைச் சித்ரவதை செய்துள்ளனர். அதை கஞ்சா கும்பலின் தலைவனான விமல்ராஜ் வீடியோ எடுத்து சிரித்துக்கொண்டே ரசித்துள்ளார். கஞ்சா விற்றதற்கானப் பணம் ஆயிரம் ரூபாய் வரவில்லை என்றால் அறுத்து போட்டுவிடுவேன்! என மிரட்டல் விடுத்துக்கொண்டே அவர்களை தாக்கியுள்ளனர். பள்ளி மாணவர்களின் செல்போன்களை பிடுங்கி வைத்து கொண்டு யாரிடம் வேண்டுமானாலும் சொல்.. ஜெயிலுக்கே போனாலும் வெளியே வந்து வெட்டுவேன் என கொலை மிரட்டல் விடுத்தது உச்சக்கட்டம். இச்சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் தற்போது இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தகவல் : NEWS18TAMIL

You may also like

Leave a Comment