நான்கு நைஜீரியர்களிடம் இருந்து போதை பொருள் வாங்கியபோது அமன் ப்ரீத் சிங் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன் ப்ரீத் சிங் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிசி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழி பல படங்களில் நடித்துள்ள ரகுல், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான இந்தியன் 2 படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் தனது நீண்ட நாள் காதலர் ஜாக்கி பகானியை ரகுல் ப்ரீத் சிங் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், நடிகை ராகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன் ப்ரீத் சிங் கொக்கையின் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஐதராபாத் காவல்துறை அமன் ப்ரீத் சிங் உள்ளிட்ட 13 பேரை கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் : NEWS18TAMIL
