Home Uncategorizedகள்ளக்குறிச்சி விவகாரம் : ரூ.10 லட்சம் இழப்பீடு ஏன்? – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரபரப்பு கேள்வி!

கள்ளக்குறிச்சி விவகாரம் : ரூ.10 லட்சம் இழப்பீடு ஏன்? – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரபரப்பு கேள்வி!

by bait
0 comments

கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் என்பது அதிகம் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை எதிர்த்து முகமது கோஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

அதில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களை பாதிக்கப்பட்டவர்களாக கருதக் கூடாது என்றும், தீ விபத்து உள்ளிட்ட இன்னல்களால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணமாக குறைந்த தொகை வழங்கும் நிலையில், கள்ளச் சாராயம் குடித்து பலியானவர்களுக்கு எந்த அடிப்படையில் அதிக நிவாரணம் வழங்கப்படுகிறது என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

banner

தகவல் : NEWS18TAMIL

You may also like

Leave a Comment