திருவையாறு அருகே காவல்நிலையம் முன்பு விஷம் குடித்த சகோதரிகளில் கீர்த்திகா உயிரிழந்தார். மேனகா சிகிச்சையில் உள்ளார். காவல் ஆய்வாளர் சர்மிளா மீது நடவடிக்கை கோரி குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம்

நடுக்காவிரி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், அதே பகுதியைச் சேர்ந்த அய்யாவு என்பவரை சாராயம் விற்பனை செய்ய வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அய்யாவுவின் மகன் தினேஷ் அந்த இளைஞர்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை அன்று தாக்குதல் நடத்தியுள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக நடுக்காவேரி காவல்நிலைய காவலர்கள் தினேஷை அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், தினேஷின் சகோதரி மேனகா தனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதால், அவரை அழைத்துச் செல்ல வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

ஆனால் காவல் ஆய்வாளர் சர்மிளா தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மேனகா, தனது சகோதரி கீர்த்திகாவுடன் சேர்ந்து காவல்நிலையம் சென்று அங்கே விஷம் குடித்துள்ளனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி கீர்த்திகா உயிரிழந்தார், மேனகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் : NEWS18TAMIL