Home Uncategorizedசாராய கடத்தலில் வெடித்த மோதல்.. 5 பேருக்கு அரிவாள் வெட்டு.. வீட்டுக்கு தீவைப்பு – நாகையில் பதற்றம்

சாராய கடத்தலில் வெடித்த மோதல்.. 5 பேருக்கு அரிவாள் வெட்டு.. வீட்டுக்கு தீவைப்பு – நாகையில் பதற்றம்

by bait
0 comments

நாகை அருகே சாராய வியாபாரிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் வீட்டுக்கு தீவைப்பு உயிர்ச்சேதங்கள் ஏதுமின்றி வீடு,வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மாட்டுக்கொட்டகைகள் முழுவதுமாக எரிந்து நாசமானது

 நாகை அருகே சாராய வியாபாரிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகை மாவட்டம் கீழ்வேளூர்அருகே திருக்கண்ணங்குடி ஊராட்சி பெரிய கூட குடியை சேர்ந்தவர் அறிவழகன் மகன் தரணிகுமார்(வயது 27).  சாராய வியாபாரியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெரிய மூக்கால்வட்டம் மற்றொரு சாராய கடத்தலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும்  காளமேகம் மகன் ஹரிகரன் (வயது27) என்பவருக்கும் சாராய கடத்தலில் ஏற்பட்ட தகராறு மோதலில் முடிந்துள்ளது. தரணிகுமாருக்கும் ஹரிகரனுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில், ஹரிஹரன் செம்பியன்மாகதேவி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் திருடி, குண்டாஸ் வழக்கில் கைதாகி சில தினங்களுக்கு முன்பு சிறை சென்று வந்துள்ளார்.

தகவல் : NEWS18TAMIL

banner

You may also like

Leave a Comment