Home Uncategorizedகஞ்சா கடத்தல் கும்பலோடு பிரியாணி விருந்து.. சொகுசு ஹோட்டலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் – சர்ச்சையை ஏற்படுத்திய  போட்டோ

கஞ்சா கடத்தல் கும்பலோடு பிரியாணி விருந்து.. சொகுசு ஹோட்டலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் – சர்ச்சையை ஏற்படுத்திய  போட்டோ

by bait
0 comments

காவல் அதிகாரியே கஞ்சா கடத்தல் கும்பலோடு பிரியாணி விருந்து சாப்பிடும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட  நாகையை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி வீட்டில் சோதனை நடத்திய நாகை நகர காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி  அதே கஞ்சா கடத்தல் கும்பலோடு அமர்ந்து  சொகுசு ஹோட்டலில் பிரியாணி  விருந்து சாப்பிடும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு கடல் வழியாக  கஞ்சா கடத்தும் குற்ற செயல்கள் நாகை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட கஞ்சா பொட்டலங்கள், விசைப்படகு மூலம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருப்பதாக நாகை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு நாகை துறைமுகத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட எஸ்.ஐ பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார்  4 கோடி ரூபாய் மதிப்புள்ள 400 கிலோ கஞ்சா பொட்டலங்களை  பறிமுதல் செய்தனர்.

தகவல் : NEWS18TAMIL

banner

You may also like

Leave a Comment