மது போதையில் நண்பரின் மனைவியை இருசக்கர வாகனத்தில் அழைத்து வரச் சென்ற இளைஞர், அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர், மது விருந்துக்கு அழைத்து கொலைபாதக செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. நடந்தது என்ன?

சென்னையில் ஆர்சிபி அணியின் வெற்றியை மது விருந்துடன் கொண்டாட அழைத்து கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட இளைஞர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தனது மனைவியிடம் தவறாக நடந்ததாக கூறி நண்பரே அடித்துக் கொன்றதன் பகீர் பின்னணி என்ன?
சென்னையில் பெருங்குடியில் உள்ள கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்தவர் 24 வயதான அப்பு. இவர், அதே பகுதியைச் சேர்ந்த கோகுல், ஜெகதீஷ், அஜய், ரமேஷ் மற்றும் வேளச்சேரியை சேர்ந்த ஜீவரத்தினம் ஆகியோருடன் கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் வெளியே சென்றுள்ளார். பின்னர், அனைவரும் கூட்டாக மது அருந்தியுள்ளனர். அப்போது, போதை அதிகமானதால் வேலைக்கு சென்ற தனது மனைவியை அழைத்து வர வேண்டுமே என்று அப்பு புலம்பியுள்ளார். ஓரளவுக்கு நிதானமாக இருந்த ஜீவரத்தினம், அப்புவின் செல்போனை எடுத்துக்கொண்டு அவரது மனைவியை இருசக்கர வாகனத்தில் அழைத்து வரச் சென்றுள்ளார்.
பின்னர், இரவில் வீட்டிற்கு வந்ததும், அப்புவின் மனைவி கணவரிடம் வாக்குவாதம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. “தன்னை கூப்பிட நீ வராமல், உனது நண்பனை ஏன் அனுப்பி வைத்தாய்” என்று சண்டையிட்டதாக தெரிகிறது. ஜீவரத்தினம் தன்னிடம் அத்துமீறலில் ஈடுபட்டதால் தான் அப்புவின் மனைவி கோபம் கொண்டதாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த அப்பு, ஜீவரத்தினத்தின் மீது கொலைவெறியில் இருந்துள்ளார். அன்றைய தினம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீழ்த்தியது
தகவல் : NEWS18TAMIL
