Home Uncategorizedசட்டவிரோத மது விற்பனை விவகாரம் : 3 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து திருவாரூர் எஸ்.பி உத்தரவு

சட்டவிரோத மது விற்பனை விவகாரம் : 3 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து திருவாரூர் எஸ்.பி உத்தரவு

by bait
0 comments

திருவாரூர் மாவட்டத்தில் மூன்று காவலர்கள், சட்டவிரோத மது விற்பனையில் தொடர்பு இருந்ததால், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் உத்தரவின்படி தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

திருவாரூர் எஸ்.பி

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ஒரு நபருடன் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, திருவாரூர் மாவட்டத்தில் மூன்று காவலர்களைத் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் உத்தரவிட்டுள்ளார். 

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் காவல் நிலையத்தில் காவலர் சரவணன், தனிப்பிரிவு காவலர் ராஜேஷ் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றும் காவலர் செல்வேந்திரன் ஆகிய மூவரும், சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த ஒரு நபருடன் தொடர்பில் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து மாவட்டக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, ரகசிய விசாரணை நடத்தப்பட்டது.

banner

நடத்தப்பட்ட விசாரணையில், இந்த மூன்று காவலர்களுக்கும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபருடன் தொடர்பு இருந்தது உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறையின் ஒழுங்கு விதிகளை மீறி, சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

தகவல் : NEWS18TAMIL

You may also like

Leave a Comment