Home Uncategorizedதாம்பரத்தில் போலீசார் அதிரடி சோதனை.. போதைப்பொருள் பறிமுதல், 7 மாணவர்கள் கைது

தாம்பரத்தில் போலீசார் அதிரடி சோதனை.. போதைப்பொருள் பறிமுதல், 7 மாணவர்கள் கைது

by bait
0 comments

தொடர் போதை பொருள் கடத்தபவர்களில் 11 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது – தாம்பரம் காவல் ஆணையர் ஐபிஎஸ் அபின் தினேஷ் மோதக் பேட்டி

தாம்பரம் மாநகர காவல்துறையின் அதிரடி சோதனையில் 166 கிராம் கஞ்சா, 5250 கஞ்சா சாக்லேடுகள் மற்றும் ஹுக்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையில் ஏழு கல்லூரி மாணவர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் காவல் ஆணையர் ஐபிஎஸ் அபின் தினேஷ் மோதக் பேட்டி அளித்துள்ளார்.

தாம்பரம் மாநகர காவல் ஆணைய அலுவலகத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகளில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதை குறித்து தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் ஐபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நேற்று போதைப் பொருட்களை தடுக்க நோக்கில் தாம்பரம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பொத்தேரிமலை நகர் மற்றும் காட்டாங்குளத்தூர் பகுதிகளில் சோதனை என்பது நடைபெற்றதாக தெரிவித்தார்.

banner

காவல் உதவி ஆணையர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டதாகவும் மொத்தம் 12 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.

அவற்றில் 5 அடுக்குமாடி குடியிருப்புகள் இரண்டு தனி வீடுகள் ஒரு பான் கடை இரண்டு பெட்டி கடைகள் காபி ஷாப் மற்றும் ஒரு சாலையோர கடைகள் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

சோதனையின் போது 166 கிராம் கஞ்சா 5250 கஞ்சா சாக்லேட் மற்றும் ஹிக்கா தொடர்பான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 10 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதுமட்டுமில்லாமல் போதை பொருட்கள் பயன்படுத்துவது குறித்து கல்லூரி மாணவர்களிடம் தொடர்ந்து தாம்பரம் காவல் நிலை உட்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சோதனையில் ஏழு கல்லூரி மாணவர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அதில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் இரண்டாம் ஆண்டு B. Tech, CSC மற்றும் நான்காம் ஆண்டு B. Tech, CSC படித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து மறைமலைநகர் காவல் நிலையத்தில் போதைப் பொருள் தடுப்பு சட்டம், 1985 NDPS Act & சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் தடுப்பு சட்டம், 2003 COTPA Act ஆகிய சட்டங்களின் கீழ், 11 நபர்கள்மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டில் தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இதுவரை 1516 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் 341 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம் 1208 கிலோ போதை பொருட்கள் உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். தொடர் போதை பொருட்கள் கடத்தல் தொடர்புடைய 11 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தகவல் : ZEENEWS

You may also like

Leave a Comment