Home Uncategorizedகள்ளச்சாராயம் என்றால் 10 லட்சம்? பட்டாசு ஆலை விபத்து என்றால் 4 லட்சமா? ஆர்.பி.உதயகுமார் கேள்வி

கள்ளச்சாராயம் என்றால் 10 லட்சம்? பட்டாசு ஆலை விபத்து என்றால் 4 லட்சமா? ஆர்.பி.உதயகுமார் கேள்வி

by bait
0 comments

கள்ளச்சாராயம் அருந்தி மரணம் அடைந்தால் 10 லட்ச ரூபாய், பட்டாசு ஆலையில் விபத்தில் இறந்தால் 4 லட்சம் ஏன் இந்த பாரபட்சம்? என சட்டமன்ற எதிர்க் கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி.  

குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் விருதுநகர் மாவட்டத்திலே தொடர்ந்து வெடி விபத்து ஏற்படுகிறது. பட்டாசு ஆலை வெடிவிபத்து என்பது அன்றாட நிகழ்வாக நாம் கவலையோடு பார்க்கிறோம் என்று சட்டமன்ற எதிர்க் கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் பேசிய அவர், சமீபத்திலே சிவகாசிக்கு அருகே சின்னக்காமன்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலைவிபத்தில் 8 பேர் இறந்தார்கள், ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்  இறந்த குடும்பத்திற்கு தலா 4 லட்ச,ம் ரூபாய்க்கு வழக்க உத்தரவிட்டார். அவர் விருதுநகர் மாவட்டம் வந்த போது அங்கே சென்று பட்டாசு ஆலை எப்படி இயங்குகிறது, தொழிலாளர்கள் எப்படி அங்கே பணி செய்கின்றார்கள், அவர்களுக்கு பணி பாதுகாப்பு என்ன என்று? ஒரு மேஜிக் ஷோவை அவர் மாடல் சோவாக நடத்திக் காட்டினார்.

ஆனால் அதற்குப் பிறகு எந்த பலனும் அந்த தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை விபத்து எண்ணிக்கை குறையவில்லை இவற்றை தடுத்து நிறுத்தப்படவில்லை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அவர்கள் வாழ்வாதாரத்தை எப்படி நாம் காப்பாற்றுவது என்று நாம் யோசிக்கிற போது ,எல்லா சாதனைகளுக்கும் பக்கத்து மாநிலங்களில் ஒப்பிட்டு பேசுவது இந்த திமுக பெயிலியர் மாடல் அரசின் வாடிக்கையாக ஒன்றாக உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சங்கரெட்டி மாவட்டத்தில், பதஞ்சேரு பகுதியில்,பாஷ்மிலாராம் என்ற தொழில் பேட்டையில் உள்ள ரசாயண தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.

அந்த மாநில அரசும், சம்பந்தப்பட்ட நிறுவனம் இணைந்து விபத்தில் உயிரிழந்தது குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் அளிக்க முன்வந்துள்ளனர். இரண்டுக்கும் உள்ள வேற்றுமையை பாருங்கள் இழப்பில் அரசால் வழங்கப்பட்டாலும், நிறுவனத்தால் வழங்கப்பட்டாலும் வெறும் 4 லட்சம் ரூபாய் என்பது அந்த உயிர்களை அரசு எவ்வளவு மலிவாக இன்றைக்கு எடை போடுகிறது என்பதுதான் இந்த ஸ்டாலின் சொல்லக்கூடிய செய்தியாக நாம் பார்க்கிறோம். கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் அந்த குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய், அப்படியானால் கள்ளச்சாராயத்தை  ஊக்குவிக்கிறார்களா? ஒரு தொழிலாளி தன் வாழ்வாதத்திற்காக உயிரை பணையம் வைத்து பணி செய்து மரணம் அடைந்தால் நான்கு லட்சம், சுகத்திற்காக கள்ள சாராயம் குடித்து உயிருந்தால் 10 லட்சம் ரூபாய் அப்படி  என்றால் இந்த அரசு உழைப்பவர்களுடைய உயிரை எவ்வளவு மலிவாக மதிப்பீடு செய்து இருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்.

banner

ஒரு நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும் என்றால்,முறை செய்து காப்பாற்றும் மன்னவன் இறைவனுக்கு சமமாக மக்கள் கருதுவார்கள் என கூறுவார்கள் ஆனால் இங்கே பேய் ஆண்டால், பிணம் தின்னும் சாஸ்திரங்கள் போல உள்ளது.. மது போதையில், கொலை, கொள்ளை,பாலியலில் சம்பவங்களில் தமிழ்நாடு தலைகுனிந்து உள்ளது. நிவாரணம் வழங்குவதில் பிற மாநிலங்களை ஒப்பிட்டு பார்ப்பதை விட ,அம்மா ஆட்சி காலத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். வெள்ள நிவாரணம், தீ விபத்து, வெடி விபத்து இதற்கு தான் நிவாரணம் வழங்குவார்கள் ஆனால் இந்தியாவிலேயே வறட்சிக்காக நிவாரண வழங்கிய ஒரே அரசு அம்மாவின் அரசு ஏறத்தாழ 2,247 கோடி அளவில் வளர்ச்சி நிவாரண தொகையை அம்மா அரசு வழங்கியது  

அதேபோல காவல்துறையில் பணிபுரிந்த அச்சுறுத்தப்பட்டு அதன் மூலம் மரணம் அடைந்த காவலர் குடும்பத்திற்கு ஒட்டுமொத்த காவல்துறைக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ஒரு கோடி ரூபாய் நிவாரண உதவி எடப்பாடியார் வழங்கினார். அதேபோல பயிர் காப்பீடு திட்டத்தின் 5,318 கோடி அளவில் விவசாயிகள் வாங்கிய  கடனை ரத்து செய்யப்பட்டது இதன் மூலம் 12 லட்சம் விவசாயிகளை பயனடைந்தனர், அதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு 12,110 கோடி விவசாயகள் வாங்கிய கடனை ரத்து செய்யப்பட்து இதன் மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்தனர். அதேபோல 100 சகவீதம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கும் வகையில், 50.13லட்சம் விவசாயிகளுக்கு 9,006 கோடி பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.

ஆனால் இன்றைக்கு டெல்டா பகுதிகளில் இரண்டாம் சாகுபடி நடைபெற்று வருகிறது இதுவரை இன்சூரன்ஸ் செய்யப்படவில்லை என்பது தான் உண்மை. இன்றைக்கு நிவாரணம் இது வழங்கப்படவில்லை படுகுழியில் விழுந்த விவசாயிகளை தூக்கி விட்டு கண்ணீரை துடைக்க முன்வரவில்லை. இதுபோன்று பாரபட்சமாக அரசு செயல்படுவது என்பது, அரசே குடிப்பவர்களை ஊக்குவிக்கிறதா? உழைப்பவர்களை இன்றைக்கு புறந்தள்ளுகிறதா இந்த அரசு என்பதை மக்கள் கேட்கிறார்கள். எடப்பாடியாரின்  எழுச்சி பயணத்தின் முதல் பயணம் மாபெரும் இமாலய வெற்றி படைத்துள்ளது. எடப்பாடியாரின் தலைமையிலே  புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர்  ஆட்சி மலர இருக்கிறது. வெல்கம்,வெல்கம் எடப்பாடியார், பாய்,பாய் ஸ்டாலின் இதுதான் தமிழகத்தினுடைய தலைப்புச் செய்தியாக உள்ளது என கூறினார்.

தகவல் : ZEENEWS

You may also like

Leave a Comment