Home Uncategorizedபயணிகள் பேருந்தில் கஞ்சா கடத்தல் : தொடரும் குற்ற சம்பவம்..!

பயணிகள் பேருந்தில் கஞ்சா கடத்தல் : தொடரும் குற்ற சம்பவம்..!

by bait
0 comments

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் நடைபெற்று வருகிறது. இதை தடுக்கும் வகையில் அந்திரா மற்றும் தமிழக காவல்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதிலும் இந்த கஞ்சா கடத்தல் சம்பவத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியவில்லை.

அந்த வகையில் பயணிகள் பேருந்தில் வைத்து திருட்டுத்தனமாக சிலர் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து வேலூர் மாவட்டத்தின் வழியாக ஆந்திரா எல்லையை கடக்கும் அனைத்து பேருந்துகளையும் போலீஸார் சோதனை செய்துள்ளனர்.

அந்த வகையில், குடியாத்தம் அடுத்த சித்தூர் கேட் மற்றும் லட்சுமணாபுரம் மார்கமாக வந்த பேருதுகளில் சோதனையிட்டபோது சந்தேகத்திற்கு இடமாக இருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த  ராமகிருஷ்ணன் மற்றும் மகேஷ் ஆகியோர் கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். 

தகவல் : ZEENEWS

banner

You may also like

Leave a Comment